Site icon அநேகன்

ஒரு மாத காலத்தில் 2 லட்சத்து 30,420 அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு! – அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர், பிப். 15
இந்நாட்டில் விவசாயம், கட்டுமானம், தோட்டம், சேவை துறை, உற்பத்தி ஆகிய  ஐந்து தொழில் துறைகளில்  வேலை செய்ய  ஏதுவாக கடந்த  ஒரு மாத காலத்தில்  2 லட்சத்து 30 ஆயிரத்து 420  அந்நிய தொழிலாளர்களுக்கு அரசாங்கம்  அனுமதி வழங்கியிருப்பதாக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்நிய தொழிலாளர்களை அதிகளவில் தருவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல.

எனினும், மோசமாக பாதிக்கப்பட்ட தொழில் துறைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்நிய தொழிலாளர்கள் தருவிக்க  அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
.

அவ்வகையில் 15 நாடுகளில் இருந்து  அந்நிய தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பதில் அரசாங்கம் தற்போது தளர்வுகளை  வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றே நாட்களில் அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் சொன்னார் .

மக்களவையில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்  அந்நிய தொழிலாளர்கள்  தருவிப்பு குறித்து எழுப்பிய  கேள்விகளுக்கு  பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாட்டில்  பல தொழில் துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் நிறுவனங்கள் மற்றும்  உற்பத்தி பெரும்  பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன.

நாட்டில் தொழில் துறைகள் மீண்டும் துடிப்புடன் செயல்படும் பொருட்டு அரசாங்கம்  அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version