தங்காக், பிப். 23-
ஜொகூர், தங்காக், பெக்கோ தோட்ட ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த 12-ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருவருளைப் பெற்றனர்.
ஆலயத்தலைவர் காளியப்பன் தலைமையில் 6 மாதங்களில் திருப்பணி வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டன. குருக்களின் வேத மந்திரங்களோடு கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பின் பேரில் அன்புள்ள கவிமாறன் கலந்து கொண்டதோடு பக்தர்கள் மத்தியில் சமய சொற்பொழிவையும் ஆற்றினார்.
