Site icon அநேகன்

மித்ராவுக்கு வெ. 10 கோடி ஒதுக்கீடு! அனைத்து இனங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பட்ஜெட்! – அமைச்சர் சிவகுமார் பாராட்டு

கோலாலம்பூர், பிப். 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்து இனங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பட்ஜெட் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடு உருமாற்ற திட்டம் என்று கூறப்படும் மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு முதன்  முறையாக பட்ஜெட்டில் ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது என்று அவர் சொன்னார்.

வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி மேம்பாடு தொழில் துறை, உணவு தட்டுப்பாட்டை நிவாரத்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

50,000 வெள்ளிக்கு கீழ் கடனை செலுத்த முடியாமல் திவால் நிலையில் உள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட மலேசியர்கள் திவால் பட்டியலில் இருந்து விடுபடவும்  இந்த பட்ஜெட் பேருதவி புரிந்துள்ளது.

400 கிளினிக்குகள் மற்றும் வசதி குறைந்த 380 பள்ளிகளைச்  சீரமைப்பு செய்ய 120 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெறும் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல் விரைவில் இடம் பெறும் என்றும் அமைச்சர் சொன்னார்.

ஒட்டுமொத்தத்தில் இது அனைத்து இனங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பட்ஜெட் என்று அவர் வர்ணித்தார்.

Exit mobile version