Site icon அநேகன்

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ நடனப் போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

கோலாலம்பூர், பிப். 24-
இந்த வார தொடக்கத்தில் மைடின் சுபாங் ஜெயா ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற இறுதிச் சுற்றைத் தொடர்ந்து, ‘டான்ஸ் பேபி டான்ஸ்’ எனும் நடனப் போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது:

அவர்களின் விவரங்கள் பின் வருமாறு:
குட்டிஸ் பிரிவு (வயது 5 முதல் 7 வரை)
முதல் நிலை வெற்றியாளர்: சிவாஞ்சலி சரவணன்.
இரண்டாம் நிலை வெற்றியாளர்: ஆதித்யா மகேந்திரா.
மூன்றாம் நிலை வெற்றியாளர்: பிரித்திகா ராமநாதன்.

சூராவளிப் பிரிவு (வயது 8 முதல் 10 வரை)
முதல் நிலை வெற்றியாளர்: ரைஷன் வெங்கடாசலம்
இரண்டாம் நிலை வெற்றியாளர்: ஹர்ஷவர்தினி சந்திரமோகன்
மூன்றாம் நிலை வெற்றியாளர்: தனிஷா ரத்தினா நாயுடு.

ஒவ்வொரு பிரிவு வெற்றியாளர்களும் முதல் நிலைக்கு ரொக்கமாக ரிம1000, ஒரு கோப்பை மற்றும் ராகாவின் அன்பளிப்பு; இரண்டாம் நிலைக்கு ரொக்கமாக ரிம700, ஒரு நினைவுப்பரிசு மற்றும் ராகாவின் அன்பளிப்பு; மற்றும் மூன்றாம் நிலைக்கு ரொக்கமாக ரிம500, ஒரு நினைவுப்பரிசு மற்றும் ராகாவின் அன்பளிப்பு ஆகியவற்றை வீட்டிற்
குத் தட்டிச் சென்றனர். மேலும், இரண்டு பிரிவுகளுக்கும் நான்கு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

ஒவ்வொரு ஆறுதல் பரிசு வெற்றியாளரும் ஒரு நினைவுப்பரிசு மற்றும் ராகாவின் அன்பளிப்பு ஆகியவற்றை  தட்டிச் சென்றனர்.
மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடர்க.

Exit mobile version