Site icon அநேகன்

சொக்சோ வாரிய இயக்குனராக டி. கண்ணன் நியமனம்!

சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் முதலீட்டு வாரிய இயக்குனராக டி. கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் இந்த நியமனத்திற்கான கடிதத்தை கண்ணனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெர்கேசோ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முஹம்மது  அஸ்மான் அஜீஸ் கலந்து கொண்டார்.

இவ்வேளையில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கண்ணன் கூறினார்.

இந்தப் பொறுப்பின் வாயிலாக சொக்சோவின் வளர்ச்சிக்கு உரிய பங்கை ஆற்றவிருப்பதாக   அவர்  குறிப்பிட்டார்.

சொக்சோவின் முதலீட்டு வாரிய இயக்குநராக நியமனம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர்  சொன்னார்.

Exit mobile version