புத்ராஜெயா, மார்ச் 6-
மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹாசானை மரியாதை நிமித்தம் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இங்குள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ‘தோ மாட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் முகமது ஹாசான் மக்கள் சக்தி கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் குழுவினரை உற்சாகத்தோடு வரவேற்றார்.
இச்சந்திப்பின்போது மக்கள் சக்தி கட்சியினர் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரிடம் விவாதித்ததோடு அம்னோ துணைத் தலைவருமான இவருடன் சேர்ந்து நடத்திய பல போராட்டங்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டது.
கட்சியின் தேசிய தலைவருடன் துணைத் தலைவர் டத்தோ ஆர்.கே.ரமேஷ், உதவி தலைவர் டத்தோ வி.சரவண குமார், தலைமைச் செயலாளர் மணிமாறன், தனிப்பட்ட செயலாளர் கணேஷ், சபா மாநில தலைவர் கேரி ரமேஷ் மற்றும் நெகிரி மாநில துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
