Site icon அநேகன்

12 ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் நந்தகுமாருக்கு டிபிகேஎல் வாடகை வீடு! -டத்தோ ராஜா சைமன் ஏற்பாடு

கோலாலம்பூர், மார்ச் 6-
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டிபிகேஎல்) வாடகை வீட்டிற்காக கடந்த 12 ஆண்டுகளாகக் காத்திருந்த லோரி ஓட்டுனர்  நந்தகுமாருக்கு அந்த வீடு பெற்றுத் தரப்பட்டதைத் தொடர்ந்து அவர் நிம்மதி பெருமூச்சடைந்தார்.

ஒரு லோரி ஓட்டுனராக இருக்கும் தான் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளோடு அதிக வாடகையில் குடியிருந்து வந்ததாகவும் அந்த வாடகைப் பணத்தைச் செலுத்த முடியாமல் தத்தளித்ததாகவும் நந்தகுமார் விவரித்தார்.

தனது சிரமங்களை புக்கிட் பிந்தாங் குடியிருப்பாளர் பிரதிநிதி மன்ற (எம்பிபி) செயற்குழு உறுப்பினர் நாச்சியப்பனிடம் தான் எடுத்துரைத்ததாகவும் அவர் இதனை மஇகா கூட்டரசு பிரதேச மாநில தலைவர் டத்தோ ராஜா சைமனின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் அவர் சொன்னார்.

ராஜா சைமன் தனது பிரச்னை குறித்து டிபிகேஎல் இயக்குநருடன் உடனடியாகப் பேசி ஒரு வீட்டிற்கு  ஏற்பாடு செய்ததாகவும் அவருக்கு இவ்வேளையில் தானும் தனது மனைவி வாணியும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நந்தகுமார் குறிப்பிட்டார்.

அதே வேளையில், தனது குடும்பத்திற்கு மூன்று அறைகள் கொண்ட இந்த வீடு கிடைப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொண்ட  மஇகா புக்கிட் பிந்தாங் டிவிஷன் தலைவர் இஞ்ஜீனியர் தங்கவேலு, கிளைத் தலைவர் சுந்தரேசன் மற்றும் நாச்சியப்பன் ஆகியோருக்கும்  கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளுக்கும் இவர் நன்றி தெரிவித்தார்.

நந்தகுமாருக்கு டிபிகேஎல் வாடகை வீடு!
-டத்தோ ராஜா சைமன் ஏற்பாடு

கோலாலம்பூர், மார்ச் 7-

Exit mobile version