Site icon அநேகன்

மனிதவளத் துறையின் 32 “TVET” மையங்களில் 20,930 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்!அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர், செப். 20-
மனிதவள அமைச்சின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 32 “TVET “தொழில் திறன் பயிற்சி மையங்களில் தற்போது 30,930 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

பொதுவாக “TVET” தொழில் திறன் கல்வி நிறுவனங்கள் நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிற்சியை வழங்குகிறது

பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் தொழில் திறன் கல்வி நிலையத்தில் நுழைவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த பயிற்சிகள் பெரிதும் உதவுகிறது.

மனிதவளத் துறையின் 32 பயிற்சி நிறுவனங்களில் 20,930மாணவர்கள் பயில்கின்றனர்.

மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி தொழில் பாதையின் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்த தொழில் திறன் கல்வியின் நோக்கம் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் எழுப்பிய கேள்விக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

Exit mobile version