Site icon அநேகன்

தலைநகரில் அதிநவீன வசதியுடன் “3 பிரவுண் பாய்ஸ்” விருந்தினர் மண்டபம்!-டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்

கோலாலம்பூர், அக்.1-

திருமண விருந்து நிகழ்ச்சி, பிறந்த நாள் விழா, நூல் வெளியீட்டு விழா, தொழில் நிறுவனங்களின் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வசதிகளைக் கொண்டு தலைநகர், மலூரியில் அதிகாரப்பூரவ திறப்பு விழா கண்டது “3 பிரவுண் பாய்ஸ்” விருந்தினர் மண்டபம்.

காம்ளெக்ஸ் மலூரி, ஜாலான் ஜெஜாக்கா, தாமான் மலூரி, செராஸ் எனும் முகவரியில் செயல்படும் இந்த மண்டபத்தை மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

“இந்தியர்கள்,  மலாய்க்காரர்கள், சீனர்கள்  உள்ளிட்ட பல்லின மக்கள் தாங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை இந்த மண்டபத்தில் நடத்தலாம். சுவையான சைவ ,அசைவ உணவு வகைகள்,  அலங்கார மேடை ஆகியவற்றோடு  பல வசதிகளும் உண்டு என்றார் “3 பிரவுண் பாய்ஸ்” விருந்தினர் மண்டபத்தின் உரிமையாளரான அண்ட்ரூ டேவிட்.

கோலாலம்பூரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் மக்கள் தங்கள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு இந்த மண்டபத்தை தாரளமாக நாடலாம் என்றார்.

இதில் 600 பேர் வரை அமரலாம். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மக்கள் முன் பதிவு செய்துவிட்டனர். அதோடு, வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் நிகழ்ச்சிகளுக்காக மக்கள் இந்த மண்டபத்திற்கு பதிவு செய்திருப்பதாக அண்ட்ரூ டேவிட் மேலும் சொன்னார்.

இந்த மண்டப திறப்பு விழாவில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோஸ்ரீ அப்துல் கனி, அஸ்னிடா துன் டாய்ம், ம இகா உதவி தலைவர் டத்தோ டி.மோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிந்தனர்.

நிகழ்ச்சியில் அண்ட்ரூ டேவிட்டின் பெற்றோர்  திரு.திருமதி டேவிட் ராஜூ-அனுராதா தம்பதியர்  பிரமுகர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.

Exit mobile version