கோலாலம்பூர், அக்.2-
மூன்று இந்திய தொழிற் துறைகள் இம்மாதம் 10ஆம் தேதி முதல் அந்நியத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்திய பாரம்பரிய தொழிற் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று இம்மாதம் 4 ஆம் தேதி அறிவித்தார்.
இதனையடுத்து, செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய தொழிற்துறைகள் அந்நிய தொழிலாளர்கள் இன்றி பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வந்தன.
இப்போது 7,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதை சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அரசாங்கம் மூலம் மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு விண்ணப்ப நெறிமுறையை விவரிக்க ஒரு விவாதத்தை நடத்தியதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட 3 தொழில் துறைகளுக்கான அந்நிய தொழிலாளர் விண்ணப்பம், செயல்முறை. பயன்பாட்டின் நிபந்தனைகளை அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பும் முதலாளிகள் இந்திய வர்த்தக சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தேசிய குடிநுழைவுத் துறை பதிவிலும் இருக்க வேண்டும்.
பொற்கொல்லர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களின் துணைத் துறைக்கு அளவுகோல்கள் மற்றும் தகுதிகள்:
* தரைப்பகுதி ஒரே மாதிரியாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் 1,000-சதுர மீட்டர் முதல் 5,000-சதுர மீட்டர் வரை, மொத்த உள்ளூர் பணியாளர்கள் எண்ணிக்கையில் 15% அந்நிய தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
• தரைப்பரப்பு 200-க்கு சமமாக அல்லது அதற்கு மேல் இருந்தால் சதுர மீட்டர் 999 குறைவாக இருந்தால் 3 முதல் 4 பேர் வழங்கப்படும்.
• தரைப்பகுதி 199-மீட்டருக்கு மேல் இல்லை என்றால் 2 தொழிலாளர்கள் வழங்கப்படும்.
முடித்திருத்தும் நிலையங்களில் 3 இருக்கைகள் இருந்தால் 1 உள்ளூர் தொழிலாளி மற்றும் 2 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்
புதிதாக அமர்த்தப்படும் அந்நியத் தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் கூடுதலாக மேலும் 3 ஆண்டுகள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
தற்போதுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தற்காலிக வேலை அனுமதி புதுப்பித்தல் விண்ணப்பம் அக்டோபர் 10 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
அதேசமயம், 10 அல்லது அதற்கும் கூடுதலாக 3 ஆண்டுகள் வேலை செய்த அந்நிய தொழிலாளர்கள் அவசியம் நாடு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
முடி திருத்தகம், நகைக்கடை மற்றும் ஜவுளியகங்களுக்கான விண்ணப்பத் தேவைகள் மற்றும் பணியாளர் வேலைவாய்ப்பு செயல்முறை பற்றிய அறிவிப்பு அமைச்சின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
