Site icon அநேகன்

கிள்ளானில் ஹிஜ்ராவின் தீபாவளிச் சந்தை! 100 இந்திய வர்த்தகர்களுக்கு வாய்ப்பு

கிள்ளான், அக் 6- 

வரும் நவம்பர் மாதம் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்
தீபாவளிச் சந்தையில் 100
இந்திய வர்த்தகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று
தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

இங்குள்ள செட்டி பாடாங்கில் நடைபெறும் இந்த தீபாவளிச் சந்தையில்
பெருநாளுக்குத் தேவையான பொருள்களை இந்திய வணிகர்கள் விற்பனை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கான வியாபார லைசென்ஸ் மற்றும் கடைகளை
ஏற்பாடு செய்யும் பொறுப்பை சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய
தொழில் ஆர்வலர் மையம் ஏற்றுக் கொள்ளும் என்றும் நஜ்வான் கூறினார்.

50 முதல் 100 வணிகர்கள் இந்த சந்தையில் பங்கு பெறவிருக்கின்றனர்.
இந்த கடைகளுக்கான விண்ணப்பங்கள் இன்னும் இரு வாரங்களில்
பெறப்படும் என்று சித்தம் ஏற்பாட்டில் இங்கு நடைபெற்ற
2023ஆம் ஆண்டிற்கான சூப்பர் டிக்டாக் வியூகப் பயிற்சித் திட்டத்தை
முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

இந்த இரண்டு நாள் பயிற்சியில் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 40
இந்திய வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின்
நிறைவு விழாவில் ஹிஜ்ரா அறவாரியத்தின் இடைக்கால தலைமைச்
செயல்முறை அதிகாரி நோர்மைஸா யாஹ்யாவும் கலந்து கொண்டார்

என்பது குறிப்பிடக்கத்தக்கது.

Exit mobile version