Site icon அநேகன்

சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களின் சேவை தொடரட்டும்! டத்தோஸ்ரீ சரவணன்

மலாக்கா, அக்.20-

சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களின் சேவை தொடர வேண்டும் என்றார் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

ஆசிரியப் பணி அறப்பணி. அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் இந்த புத்தகத்தில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் மன உளைச்சலைத் தீர்க்கும் நூலாகவும் இந்த நூல் அமையும் என்பதில் சந்தேகமில்லை என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் குறிப்பிட்டார்.

இனிய நண்பரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா எழுதிய “அன்புள்ள ஆசிரியர்களே” எனும் நூலை, மலாக்காவில் பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் உள்ள இந்திய ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கியதாக அவர் சொன்னார்.

Exit mobile version