பத்துமலை, அக்.22-
நாளை 23 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் நாளை மறுநாள் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் திருத்தல வளாகத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த நவசண்டி மகா யாகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி பத்துமலை திருத்தல ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு நவசண்டி மகா யாகம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றும் இந்த தேதியை மாற்றும்படியும் ஏற்பாட்டாளர்கள் கூறியதைத் தொடர்ந்து இதனை தேவஸ்தானம் ஒத்தி வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காகப் பதிந்து கொண்டவர்களின் பணம் திரும்ப தரப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த நவசண்டி மகா யாகம் பின்னொரு தேதியில் நடைபெறும் என்று கூறிய அவர், இந்த அசெளகரியத்திற்காக பெரும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
