Site icon அநேகன்

தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ற பயிற்சி திட்டங்கள் வடிவமைப்பு: நிறுவனங்களுக்கு உதவுகிறது என்ஒஎஸ்எஸ்!

புத்ரா ஜெயா, அக்.25-
மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தலைமையில் தேசிய தொழில் திறன் தரநிலை (என்ஒஎஸ்எஸ்) தொடர்பான திறன் மேம்பாட்டுத் துறை குழுவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

என்ஒஎஸ்எஸ் என்பது ஒரு குறிப்பிட்ட துறை, வேலை நிலை மற்றும் அந்த திறன்களை அடைவதற்கான பாதையில் பணிபுரியும் திறமையான தொழிலாளிக்குத் தேவையான திறன்களை கோடிட்டுக் காட்டும் ஆவணமாகும்.

தொழிற்பயிற்சி மையங்களுக்கு என்ஒஎஸ்எஸ்ஸின் வளர்ச்சியானது தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி திட்டங்களை வடிவமைக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது.

உருவாக்கப்பட்ட ஒவ்வொரு என்ஒஎஸ்எஸ்ஸும் ஒரு குறிப்பிட்ட வேலைத் துறையில் உள்ள தொழில் கட்டமைப்பின் படி, வேலைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. இது தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலையைச் செய்யும் திறமையான பணியாளர்களால் வழங்கப்படுகிறது என்பதை சிவகுமார் கோடி காட்டினார்.

Exit mobile version