Site icon அநேகன்

பிரம்மாண்ட நம்பிக்கை நட்சத்திர விருது விழா!பி.ஆர்.ராஜன், கவிராஜன் & ஜமுனா வேலாயுதம் உள்பட 32 பேருக்கு விருதுகள்

 

கோலாலம்பூர், அக்.28-

நம்பிக்கை குழுமம் ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்ற பிரம்மாண்ட  ‘நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில்  சிறந்த பத்திரிகை ஆசிரியராக பி.ஆர்.ராஜன்,  சிறந்த செய்தியாளராக ஜெ.கவிராஜன் , புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளராக ஜமுனா வேலாயுதம் உட்பட 32 பேர் தத்தம் துறையில் புரிந்து வரும் அருஞ்சேவைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இப்பட்டியலில் சிறந்த நிழற்பட கலைஞராக பி.மலையாண்டி, சிறந்த எழுத்தாளராக சிவாலெனின்,  சிறந்த கல்வியாளராக டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா,  சிறந்த தன்முனைப்பு பேச்சாளராக தன்முனைப்பு பாலசுப்ரமணியம், சிறந்த மருத்துவராக டத்தோ டாக்டர் அமீன் ஷேய்க்,  சிறந்த விளையாட்டு வீரராக தீனா முரளிதரன், சிறந்த  மூத்த விளையாட்டாளராக மாஸ்டர் சிவபிரகாசம், சிறந்த சேவையாளராக அண்ணாதுரை காளிமுத்து,கலைத்துறை வாழ்நாள் சாதனையாளராக கே.குணசேகரன் மற்றும் துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளராக டான்ஸ்ரீ டாக்டர் கே.சோமசுந்தரம் ஆகியோரும்  இடம் பெற்றிருந்தனர்.

 தொடர்ந்து, இவ்விழாவில் சிறந்த முன்னோடி தமிழ்ப்பள்ளியாக காஜாங் தமிழ்ப்பள்ளியும் சிறந்த சமூக இயக்கமாக பியோ லைஃப் சொசைட்டியும் ( சுத்த சமாஜம்) தேர்ந்தெடுக்கப்பட்டன.

வாக்குகள் வாயிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஜமுனா வேலாயுதத்தையடுத்து (புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர்) புகழ்பெற்ற நகைச்சுவையாளராக கபின், புகழ்பெற்ற நடன கலைஞராக எம்.எஸ்.விமல். சிறந்த இசையமைப்பாளராக ஜெய், சிறந்த சிந்தனையாளராக டாக்டர் சஞ்சய் ஷான், புகழ்பெற்ற தொகுப்பாளராக கீதா அம்மாசி, புகழ்பெற்ற பயிற்சியாளராக பிரபு கலைச்செல்வன்,  புகழ்பெற்ற பாடகராக சந்தேஷ், புகழ்பெற்ற வர்த்தகராக விக்னேஸ்வரி நராஜா ஆகியோர் நம்பிக்கையின் நட்சத்திர விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

புகழ்பெற்ற பாடலாசிரியராக மணிவில்லன்ஸ், புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநராக செப் டேவ்,  புகழ்பெற்ற நடிகையாக முன்நிலா, புகழ்பெற்ற நடிகராக டெனிஸ் குமார், புகழ்பெற்ற இயக்குநராக கார்த்திக் ஷாமலன் மற்றும் புகழ்பெற்ற சமூக ஊடக நட்சத்திரமாக நிலா லிங்கேஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில்   புகழ்பெற்ற படைப்பாக அடைமழை காலம் தேர்வு பெற்றது.

நம்பிக்கை குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பால் தலைமையில் ஈரோடு மகேஷ்- ரேவதி மாரியப்பன் இருவரின் விறுவிறுப்பான அறிவிப்பில் மலர்ந்த இவ்விழாவில் மனித வள அமைச்சர் வி.சிவகுமார்,  கூட்டுறவு மற்றும் தொழில் மேம்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ்வரன், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. மோகன்,  எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் டாவூட், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ பி.சகாதேவன், கோலாலம்பூர் ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன், மலேசிய இந்திய முஸ்லிம்  உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜஹாவர் அலி உட்பட திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.  

முன்னதாக நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய டத்தோ ஶ்ரீ முஹம்மது இக்பால் , இவ்விழாவின் வெற்றிக்காக அல்லும் பகலுமாகக் கடுமையாகப் பாடுபட்ட நம்பிக்கை குழுமத்தின் தலைமை ஆசிரியர் ஃபிதாவுல்லாஹ், மேலாளர் தயாளன் சண்முகம், சுஹைனா, பார்த்திபன், மவித்திரன், அஸ்வினி மற்றும் ஒட்டுமொத்த ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version