Site icon அநேகன்

மலேசிய உருமி மேள இசை இயக்கத்தின் தமிழர் திருநாள் 3.0 நிகழ்ச்சி


கோல சிலாங்கூர், அக். 30-

மலேசிய உருமி மேள இசை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் 3.0 நிகழ்ச்சி கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய இவ்விழாவில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.

மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் பொறுப்பதிகாரி டத்தின் ஷலிடா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோல சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
அதிர்ஷ்ட குலுக்கல் வாயிலாக பத்து பேர் தங்க மூக்குத்திகளைப் பெற்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் தோரணம் பின்னுதல் ,மலர் தொடுத்தல், வர்ணம் தீட்டுதல்,சட்டி உடைத்தல் போன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆலய தலைவர் கண்ணதாசன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை அன்புள்ள கவிமாறன் ஒருங்கிணைந்து வழிநடத்தினார். இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்றினார்கள் .இயக்கத்தின் தலைவர் சிவா ஏற்பாட்டில் பிற்பகல் 3.00 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சரியாக 7.15க்கு நிறைவு பெற்றது. வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்சுவை உணவுக வகைகள் பறிமாறப்பட்டன.

Exit mobile version