கோலாலம்பூர், நவ.1-
கோவிட் -19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியாக காற்றோட்ட கருவிகள் பெறப்பட்டபோது தாம் சுகாதார அமைச்சராக இல்லை என்று கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இவ்விவகாரம் பற்றிப் பேசுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரை கைரி கேட்டுக் கொண்டார்.
“இந்தக் கருவிகள் பெறப்பட்டது 2020 ஆம் ஆண்டில். நான் சுகாதார அமைச்சர் ஆனது 2021 ஆகஸ்டு மாதம்”.
” இது பற்றி தகவல் இருந்தாலும் அது சரியாக இல்லை.இது குறித்து ஏன் என்னிடம் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கெலுவார் செகெஜாப் ஆகக் கடைசியான நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.
.கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 பெருந்தொற்று உச்சகட்டத்தை அடைந்திருந்த வேளையில் சுகாதார அமைச்சுக்கு சீன நிறுவனம் ஒன்று பயனற்ற காற்றோட்டக் கருவிகளை வழங்கியதாக பொது கணக்குக் குழு வெளியிட்ட அறிக்கை குறித்து கைரி கருத்துரைத்தார்.
தாம் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நடக்காத ஒன்றுக்காக தாம் பொறுப்பேற்க முடியாது என்றார் கைரி.
-மலேசியா கினி
