புத்ராஜெயா, நவ.3-
நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 2,272ஆக (0.4%) அதிகரித்துவிட்டன. இது கடந்த வாரத்தில் பதிவு செய்யப்பட்ட 2,262 சம்பவங்களைக் காட்டிலும் 10 சம்பவங்கள் அதிகரிப்பாகும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் முகமட் ரட்சி அப்துல் ஹாசான் தெரிவித்தார்.
இந்த 43ஆவது வாரத்தில் சிக்கல்மிக்க டிங்கி சம்பவத்தால் எந்த மரண சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை.
“இதுவரை ஒட்டுமொத்தமாக 98,715 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்தாண்டின் இதே கால கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 49,569 சம்பவங்களைக் காட்டிலும் 99.1 விழுக்காடு அதிகமாகும்”.
அதே போல், சிக்கல்மிக்க டிங்கி சம்பவத்தால் 73 மரண சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்தாண்டின் இதே கால கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 33 சம்பவங்களைக் காட்டிலும் அதிகமாகும் என்று ஓர் அறிக்கையில் டாக்டர் முகமட் ரட்சி குறிப்பிட்டார்.
-பெரித்தா ஹாரியான்
