கோலாலம்பூர், நவ.3-
நாடு முழுவதும் நிலச்சரிவு நிலவும் ஆபத்து நிறைந்த 31 இடங்களைக் கனிம மற்றும் புவியியல் துறை அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைமை இயக்குநர், ஸம்ரி ரம்லி தெரிவித்தார்.
இது இம்மாதத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைத் திட்டமாகும்.
இத்துறையின் வாயிலாக நாடு முழுவதும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான 31 இடங்களை இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
அவற்றில் கிள்ளான் பள்ளத்தாக்கு, தஞ்சோங் பூங்கா மற்றும் பாயா தெருபோங் (பினாங்கு), ஈப்போ (பேராக்), கேமரன் மலை (பகாங்), குண்டாசாங் (சபா) பாவ் (சரவாக்) ஆகியவை அடங்கும் என்று ஓர் அறிக்கையில் ஸம்ரி ரம்லி குறிப்பிட்டார்.
-பெரித்தா ஹாரியான்
