Site icon அநேகன்

வெள்ளை அரிசிக்கான ஒப்ஸ் பெர்செப்பாடு நடவடிக்கை நவ.17 வரை நீட்டிப்பு -டத்தோ சான் பூங் ஹின்

கோலாலம்பூர், நவ.4-

   உள்நாட்டு வெள்ளை அரிசி அமலாக்க ஒப்ஸ் பெர்செப்பாடு நடவடிக்கை கடந்த மாதத் தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத்திற்கானத் துணை அமைச்சர், டத்தோ சான் பூங் ஹின் தெரிவித்தார்.

  ”சபா, சரவாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி கடத்தப்படுவதாகப் பிரச்சனை உருவானதைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கையைத் துரிதப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது”.

  இவ்விவகாரம் விவசாயிகள் அமைப்பு வாரிய (எல்.பி.பி.) கோபுரத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றப் பணியாளர்கள் குழுவிற்கான வாராந்திர கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  இந்த கால அவகாச நீட்டிப்பின் மூலம் ஒப்ஸ் பெர்செப்பாடு சோதனை நடவடிக்கை சபா, சரவாக் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி உதவித் தொகை மற்றும் நாட்டின் பணம் வீணாகுவதைத் தவிர்க்க பணியாளர்கள் குழு வாயிலாக இன்னும் கடுமையாக்கப்படும் என்று ஓர் அறிக்கையில் கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினருமான சான் பூங் ஹின் குறிப்பிட்டார்.   

Exit mobile version