Site icon அநேகன்

95% நுரையீரல் புற்றுநோய் சம்பவங்கள் தாமதமாகக் கண்டறியப்படுகின்றன -டாக்டர் முரளிதரன்

பெட்டாலிங் ஜெயா, நவ.5-
மலேசியர்களை பாதிக்கக்கூடிய 3 முதன்மைப் புற்றுநோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் என்று மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் (என்.சி.எஸ்.எம்.) நிர்வாக இயக்குநர் டாக்டர் முரளிதரன் முனுசாமி தெரிவித்தார்.
இந்தப் பட்டியலில் 95 விழுக்காட்டுச் சம்பவங்கள் தாமதமாகக் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.
ஆண்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய்க்கு அடுத்தபடியான 2ஆவது மிகப் பெரிய நோயாக இந்த நுரையீரல் புற்றுநோய் திகழ்வதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நோய் புகைபிடிக்காத பெண்களைத்தான் அதிகம் பாதிப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய போது டாக்டர் முரளிதரன் குறிப்பிட்டார்.
 
-த ஸ்டார்.காம்

Exit mobile version