Site icon அநேகன்

ஆஸ்ரோவின் 2023 தீபாவளி முதல் ஒளிபரப்புகள்

கோலாலம்பூர், நவ.7 –

இவ்வருட  தீபாவளியையொட்டி  ஆஸ்ரோ தனது வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கிறது.

தீபாவளி கொண்டாட்டம் 2023 (நேரலை)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 10 நவம்பர், இரவு 9 மணி

இயக்குநர்: குமரன் ராமசாமி

வகை: கச்சேரி,

இந்த நேரலைக் கச்சேரி, வசந்தம் எனும் சிங்கப்பூர் தொலைக்காட்சி அலைவரிசையிலும் ஓரே நேரத்தில் ஒளிபரப்பப்படும். பல்வேறு  பிரபலமான உள்ளூர் திறமையார்களுடன் சிங்கப்பூர் பிரபலங்களானப் பாடகர்கள், ஷபீர் மற்றும் சுதாஷினி மற்றும் வானொலி அறிவிப்பாளரான, ஹலீமா ஆகியோர் பங்கேற்பர். கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் அஜெண்டா சூரியா தீபாவளி கார்னிவலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகிறார்கள்.

என் இவனிங் வித் சஞ்ஜை சுப்ரமணியன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 11-12 நவம்பர், காலை 9 மணி

இயக்குநர்: குமரன் ராமசாமி

கலைஞர்கள்: ஸ்ரீ சஞ்ஜை சுப்ரமணியன், ஸ்ரீ நெய்வேலி பி வெங்கடேஷ் (மிருதங்கம்) & ஸ்ரீ ஆலத்தூர் டி. ராஜகணேஷ் (கஞ்சிரா)

வகை: இசை நிகழ்ச்சி

ஸ்ரீ சஞ்ஜை சுப்ரமணியனின் கர்நாடக இசை நிகழ்ச்சி.

மகள் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 11 நவம்பர், காலை 10 மணி

இயக்குநர்: சத்யன் அந்திக்காடு

நடிகர்கள்: ஜெயராம், மீரா ஜாஸ்மின் & நஸ்லன் கே. கஃபூர்

வகை: குடும்ப நாடக திரைப்படம்

பல்வேறு காரணங்களுக்காக உறவுகள் துண்டிக்கப்பட்ட  பிறகு  பெற்றோருடன் மீண்டும் இணைவதில் உள்ள தடைகளைப் பற்றிய கதை.

ஷ்ரத்தாஞ்சலி டு வாணி ஜெய்ராம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 11 நவம்பர், காலை 10.30 மணி

கலைஞர்கள்: எஸ்பிபி சரண், எஸ்பி சைலஜா, மனோ, கல்பனா & பலர்

வகை: இசை நிகழ்ச்சி

மறைந்த ஸ்ரீமதி வாணி ஜெய்ராம் அவர்கள் விட்டுச் சென்ற இசையைப் போற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, அவரது இசையின் மாயாஜாலத் தருணங்களை நினைவுக் கூரும். எஸ்பிபி சரண், எஸ்பி சைலஜா, மனோ, கல்பனா மற்றும் பலப் பாடகர்கள் பாடி அசத்தும் இசை ஜாம்பவானின் ஆத்மார்த்தமான மெல்லிசைகளைக் கேட்டு மகிழுங்கள்.

Exit mobile version