Site icon அநேகன்

அம்பாங்கில் பண்பாட்டு தீபாவளி நிகழ்ச்சி

 

அம்பாங், நவம்பர் 9-

 கிளிக் ட்ரீம்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின்  ஏற்பாட்டில் 

பண்பாட்டு தீபாவளி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சின் ஆதரவோடு அம்பாங், ஸ்பெக்ரம் மால் பேரங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மதியம் 12 தொடங்கி இரவு 9.30 வரை பலவித போட்டிகளோடும் கலை கலாச்சார உரை மற்றும் நிகழ்ச்சிகளோடும் சிறப்பாக நடைபெற்றது .

 வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது அதோடு  போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரொக்கப்  பரிசுகள் வழங்கப்பட்டன . அனைவரும் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும்  இல்லம் திரும்பினர்,

Exit mobile version