பெட்டாலிங் ஜெயா, நவ.12-
இத்தீபத் திருநாளை உறவுகள் நட்புகளுடன் இணைந்து இனிதே கொண்டாடி மகிழ்வதே இப்பண்டிகையின் சிறப்பாகும் என்கிறார் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷ்யகரன்.
அதே வேளையில், வாழ்வு சிறப்புற அரசாங்க வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தில் கொள்ளும்படி இந்திய சமூகத்தினருக்கு இவ்வேளையில் ரஜீவ் ஆலோசனை கூறுகிறார்.
குறிப்பாக, மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக சமூக நலம், வர்த்தகம், சுகாதாரம், கல்வி என பல துறைகளில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சிலாங்கூர் மாநில திட்டங்களில் பங்கேற்றுப் பயனடையும்படி சிலாங்கூர் மாநில இந்தியர்களை இத்தீபாவளி திருநாளில் அவர் கேட்டுக் கொண்டார்.
“தீப ஒளி எங்கும் பரவி மங்கலம் பெருகட்டும்”
