Site icon அநேகன்

திறமையை வளர்த்து வாழ்வில் முன்னேறுவீர்! டத்தோ ஸ்ரீகணேஷ் வாழ்த்து

கோலாலம்பூர், நவ.12-
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு திறமைகளை வளர்த்துக் கொள்வது முக்கியம். அவ்வகையில் உலக மாற்றத்திற்கு ஏற்ப தொழிற்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறும்படி இத்தீபத் திருநாளில் இளைஞர்களை எஸ்ஜி எடுகேஷன் குரூப் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ ஸ்ரீகணேஷ் கேட்டுக் கொண்டார்.

தற்போது சில உலக நாடுகளில் மின்சார கார்கள் பயனீட்டில் உள்ளன. அவற்றின் தேவைகள் அதிகரிக்கும்போது இந்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இதனை உணர்ந்து இளைஞர்கள் இதனைக் கற்றுக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.

துரித மேம்பாடு கண்டு வரும் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன ஒருங்கிணைப்பு முறை போன்றவற்றை உள்ளடக்கிய தொழிற்துறைகளுக்குத் தேவையான ஆற்றலை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும். இதன் வழி கைநிறைய வருமானத்தை ஈட்டி ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறலாம் என்று தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் அவர் வலியுறுத்தினார்

Exit mobile version