Site icon அநேகன்

மைபிபிபி தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் காலமானார்!

கோலாலம்பூர், நவ.17-

மக்கள் முற்போக்கு கட்சியின் (மைபிபிபி) தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டென்னிஸ் டி குருஸ் இன்று காலமானார்.இவருக்கு வயது 67.

இவர் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் பின்னிரவு வேளையில் காலமானதாக மைபிபிபி முதிர்நிலை உதவி தலைவர் டத்தோ லோக பாலமோகன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

தனது நண்பர்களோடு வெளியே சென்றிருந்த வேளையில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர் உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

“அதற்கு முன்பு இரவு  மணி 10.30க்கு என்னுடன் தொடர்பு கொண்ட டத்தோஸ்ரீ மெக்லின்   இவ்வாரம் நடைபெறவிருக்கும் உச்சமன்ற கூட்டம் மற்றும் கட்சி விவகாரம் போன்றவை குறித்து  பேசினார்” என்றார்  லோக பாலமோகன்.

Exit mobile version