Site icon அநேகன்

மனிதவள மேம்பாட்டு கழக இயக்குநர் குழு தலைவராக டான்ஸ்ரீ தெர் லியோங் யாப் நியமனம்!

புத்ரா ஜெயா, நவ 29-
மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் (பிஎஸ்எம்பி) இயக்குநர்கள் குழுவின் தலைவராக டான்ஸ்ரீ டத்தோ தெர் லியோங் யாப் நியமிக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

டான்ஸ்ரீ தெர் லியோங் யாப் ஒரு தொழில் முனைவர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

தொழில் இயந்திரப் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் பல்வேறு துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

வர்த்த்கத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் வெளிப்படையாகப் பேசுபவர்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூகத்தின் சமூக நலன் பிரச்சினைகளுக்காகப் போராடியவர்.

டான்ஸ்ரீ தெர் ஒற்றுமையின் தூதராக முடிசூட்டப்பட்டவர்.

இவர் தற்போது சன்சூரியா பெர்ஹாட்டின் செயல் முறை தலைவராக உள்ளார்.

அவரது தலைமையில் சன்சூரியா பெர்ஹாட் ஒரு சிறிய நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது .

சொத்துடமை மேம்பாடு, சுகாதாரம், கல்வி, கட்டுமானம் மற்றும் பல தொழில்களில் இவர் கால் பதித்துள்ளார்.

மேலும், மலேசிய பங்கு சந்தையில் சன்சூரியாவையும் பட்டியலிட வழி வகுத்தவர்.

டான்ஶ்ரீ தெர் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளளதை மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் வரவேற்றுள்ளார்.

இவரின் நியமனம் எச்ஆர்டி கார்ப்பின் இயக்குநர்கள் குழுவுக்கு மதிப்பு சேர்க்கும்.

மேலும் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version