கோலாலம்பூர், டிச.4-
காப்புறுதி முகவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு ஒன்று தலைநகர் அங்காசா தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” எனும் தலைப்பில் நாடறிந்த பேச்சாளரும் கலைஞருமான கவிமாறன் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் சிறப்பாக செயல்படும் முகவர்களுக்கு வெற்றியாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இதுபோன்ற விருதுகள் வளர்ந்து வரும் இளம் காப்புறுதி முகவர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.
இந்த கருத்தரங்கில் சுமார் 90க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை குமரன் தலைமையில் மேகா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
