கோலாலம்பூர், டிச.5-
வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து கோலாலம்பூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் தனது விமானப் பயணம் ரத்துச் செய்யப்பட்டது என்று மலேசிய விமான நிறுவனத்தின் (எம்ஏஎஸ்)சுற்றுலா ஆலோசகப் பிரிவு தெரிவித்தது.
இன்று காலை 9.10 மணிக்குச் சென்னை விமான நிலையத்திற்குப் புறப்படத் திட்டமிடப்பட்ட எம்.எச்.182 ரக விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதில் எம்.எச்.183 ரக விமானத்தின் வாயிலாக சென்னையில் இருந்து திரும்பி வரும் பயணமும் ரத்து செய்யப்பட்டது என்று ஓர் அறிக்கையில் மலேசிய விமான நிறுவனம் குறிப்பிட்டது.
பருவநிலை மாற்றம் காரணத்தினால் சென்னை விமான நிலையம் நேற்று (4ஆம் தேதி) காலை 9.17 மணி தொடங்கி மூடப்பட்டுள்ளது.
மிக்ஜம் சூறாவளியால் சென்னை தற்போது கனத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
-பெர்னாமா
