Site icon அநேகன்

செராஸ் மறுவாழ்வு மருத்துவமனைக்கு வருகையாளர் வாரிய உறுப்பினர்கள் குழு வருகை

கோலாலம்பூர், டிச.14-

இங்குள்ள செராஸ் மறுவாழ்வு மருத்துவமனைக்கு மருத்துவமனை வருகையாளர் வாரிய உறுப்பினர்கள் (ஏ.எல்.பி.எச்) குழு அண்மையில் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டது.

இந்த மருத்துவமனையின் தினசரி நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கக்தைப் பெற அதன் ஊழியர்கள், பல்வேறு கிளினிக்குகளைச் சேர்ந்த நோயாளிகளுடன் இக்குழு சுமார் 2 மணி நேரத்தைச் செலவழித்தது.

லேடி டெம்பிளர் மருத்துவமனை என்று இதற்கு முன்பு அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனை நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். முன்பு 20.3 ஹெக்டர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது மறுவாழ்வை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமனையாக செயல்படுகிறது.

இதில் கட்டில்கள் (166), நிபுணத்துவ கிளினிக் (5), சாதாரண கிளினிக் (24), 52 இலாகாக்களுடன் மருத்துவமனை மருத்துவ மற்றும் நிர்வாகப் பிரிவும் உள்ளது.

இந்த மருத்துவமனை மலேசியாவில் பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. இது மறுவாழ்வு மருத்துவ சேவைக்கான 3ஆம் நிலை பரிந்துரை மையமாக அங்கீகரிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தொழில்மயமாக்கப்பட்ட கட்டட அமைப்பைக் (ஐ.பி.எஸ்.) கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஃபைசுல் நிஸாம் அபு சாலிம் தலைமையில் மருத்துவமனை வருகையாளர் வாரிய உறுப்பினர்கள் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இதன் செயற்குழு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக கோலாலம்பூர் மாநகர் மன்ற வாரிய குழு உறுப்பினரும் கெ அடிலான் கூட்டரசு பிரதேச உதவி தலைவருமான என்றி லாய் நியமிக்கப்பட்டார்.

முதல் நிலை துணைத் தலைவராக டாக்டர் ராஜேஸ்வரன் த /பெ கிருஷ்ணா குட்டி , இரண்டாம் நிலை துணைத் தலைவராக ஜோனாதன் வேலா, செயலாளராக ஜேக் தாய் மற்றும் பொருளாளராக சுஸாய்ரி டத்தோ எம். சுக்கோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Exit mobile version