Site icon அநேகன்

இந்திய சமூகத்தை அன்வார் தொடர்ந்து புறக்கணிப்பதா? -மலேசிய இந்திய மக்கள் கட்சி

பெட்டாலிங் ஜெயா, டிச.14-

அமைச்சரவை சீரமைப்பில் இந்தியர் ஒருவரைக் கூட அமைச்சராக நியமிக்காமல் இருக்கும் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முடிவு இந்நாட்டிலுள்ள இந்தியர்களை அவர் தொடர்ந்து புறக்கணிப்பதைத்தான் காட்டுகிறது என்று மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்.ஐ.பி.பி.) துணைத் தலைவர், எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அன்வாரின் இதற்கு முந்தைய நடவடிக்கைகளை கட்சி பார்க்கும் போது இந்தியர்களுக்கு மிகவும் மோசமான பிரதமர் என்பதைத் தொடர்ந்து காட்டி வருகிறது.

நாட்டில் அமைச்சரவை கடந்த 1955ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதிலிருந்து இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படாதது இதுதான் முதன்முறையாகும்.

கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தானுக்கு முழு ஆதரவை வழங்கிய இந்திய சமூகத்தைப் புறக்கணித்தது அரசாங்கத்தின் மற்றொரு வெற்றியாகும் என்று மலேசியா கினியிடம் அவர் விவரித்தார்.

-மலேசியா கினி

Exit mobile version