Site icon அநேகன்

கோவிட் ஹாட்லைன் விவகாரம் ஆராயப்படுகிறது -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

கோலாலம்பூர், டிச.17-

கோவிட் தொற்றை மதிப்பீடு செய்வதற்காகச் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசால் உருவாக்கப்பட்ட கோவிட் மதிப்பீட்டு மையத்திற்கான சிறப்பு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த முடியவில்லை என்று சமூக வலைத் தள பயனர்கள் வருத்தம் கொள்வதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார். 

தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டதைத் தொடர்ந்து தற்போது 03-77239299 என்ற எண்ணை மீண்டும் பயன்படுத்த அனுமதி கிடைத்ததாகக் கூறப்படுகிறது. தொற்றில் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களைச் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமா அல்லது அருகில் உள்ள சுகாதாரச் கிளினிக்குகளுக்குச் செல்ல வேண்டுமா என்பதற்கான ஆலோசனையைப் பெற்று வருகின்றனர்.

அதே சமயம் இந்த ஹாட்லைன் எண்ணின் நிலையை முன்கூட்டியே சோதனைச் செய்யக் குழுவினரைக் கேட்டுக் கொள்வது மட்டுமின்றி தொற்று கண்டவர்கள் நிலைமை மோசமானால் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது இந்த சிறப்பு தொலைபேசி எண்ணை நான் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கூடிய விரைவில் குணமடைந்து உங்களின் நோய் அறிகுறிகளைச் சரிபார்த்து கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒருவேளை நிலைமை மோசமாகி விட்டால் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சுகாதார கிளினிக்கிற்குச் செல்லுங்கள் என்று இணையத்தில் வெளியிட்ட செய்தியில் டாக்டர் ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.  

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version