Site icon அநேகன்

அறிவாற்றல் & திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மித்ரா அதிகரிக்கும்! -டத்தோ ரமணன்

கோலாலம்பூர், டிச.18-


தொழில்திறன் மற்றும் அறிவை வலுப்படுத்தக்கூடியத் திட்டங்களை அதிகரிக்க மித்ரா தற்போது முயற்சி மேற்கொண்டு வருவதாக அதன் சிறப்புச் செயற்குழுத் தலைவர், டத்தோ ரமணன் தெரிவித்தார்.

எஸ்.பி.எம். மாணவர்களுக்கான கருத்தரங்கு போன்ற திட்டங்கள் நாடு முழுவதும் அடிக்கடி செயல்படுத்தப்படும் என்று தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான ரமணன் கூறினார்.

இதுபோன்ற செயல்திட்டங்களை நாடு முழுவதும் நாங்கள் செயல்படுத்துவோம்.

தற்போது வருங்காலத்திற்கான பல்வேறு செயல்திட்டங்களை மித்ரா திட்டமிட்டு வருகிறது.

இதில் சில மாற்றங்கள் இருக்கும். இங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நாம் அனைவரும் பார்ப்போம். இருந்த போதிலும் தற்போது இதுபோன்ற எஸ்.பி.எம். கல்வி கருத்தரங்குகளை நிச்சயமாக நான் நாடு முழுவதும் ஏற்பாடு செய்வேன் என்று மாஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் மித்ரா ஏற்பாட்டிலான இக்கருத்தரங்கின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் குறிப்பிட்டார்.

Exit mobile version