Site icon அநேகன்

‘ரூமா காசே ஹராப்பான் காவான்’ திட்டம்: புதுப்பிக்கப்பட்ட வீட்டைப் பெற்றார் ரோஸ்லி

கோலாலம்பூர், டிச.22-

‘ரூமா காசே ஹராப்பான் காவான் 3ஆவது தொடரின் கீழ் இலவசமாகப் புதுப்பிக்கப்பட்ட வீட்டைப் பெற்ற அதிர்ஷ்டசாலியானார் ரோஸ்லி ஹாமிடோன்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான  ரோஸ்லி (67) கடந்த 30 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருவதாக அறியப்படுகிறது.

வீட்டை  மாற்றி அமைக்கும் திட்டத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக இறைவனுக்குத் தாம் நன்றி கூறுவதாக  தனித்து வாழும் தந்தையான ரோஸ்லி குறிப்பிட்டார்.

தற்போது இவர்  மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த மூன்று பிள்ளைகளில் ஒருவர் 2012 ஆம் ஆண்டு நடந்உ:த சாலை விபத்தில் முதுகு தடத்தில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதி உடல் செயலுக்கு உள்ளாகி படுத்த படுக்கையாக இருக்கிறார்.

” இந்த வீடு குடியிருப்பதற்கு வசதியாக இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஸ்ரீ ஜொகூர் வீடமைப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இந்த வீட்டிற்கான சாவியை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலிடமிருந்து  பெற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிகளிடத்தில்  தெரிவித்தார்.

பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் துறையின்  கூட்டரசு பிரதேச அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் ஜாலேஹா முஸ்தாபா  முதன் முறையாக வருகை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரோடு, பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான அபிடினும் கலந்து கொண்டார்.

 2023 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட  ‘ரூமா காசே ஹராப்பான் கா வான்’ திட்டத்தை  பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதி யாயாசான் கெர்பாங் பண்டார் துன் ரசாக்குடன் இணைந்து மேற்கொள்வதாக பிரதமரின் துணைவியாருமான வான் அஜிசா சுட்டிக் காட்டினார்.

” தேர்ந்தெடுக்கப்பட்ட பி 40 மக்களின் வீடுகளை இலவசமாகப் புதுப்பிக்க இத்திட்டம் உதவுகிறது ” என்றார்.

“நகர்ப்புற பகுதியில் வறுமை நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எங்களின் கடப்பாடாகவே இதனை நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version