Site icon அநேகன்

அபிநயா சேத்ரா நுண்கலாலயத்தின் சிலம்பொலி! இன்று ஷா ஆலமில் நடைபெறுகிறது

ஷா ஆலம், டிச. 23-


குரு ஸ்ரீமதி நா.விக்னேஸ்வரி சந்திர மோகனை ஆசிரியராகக் கொண்ட அபிநயா சேத்ரா நுண்கலாலயத்தின் ‘சிலம்பொலி 4’ சலங்கை பூஜை இன்று நடைபெறவிருக்கிறது.

இங்குள்ள செஷன்ஸ் 32, பெர்சியாரான் கெமுனிங் பிரிமா, கீ பெங் சீனப்பள்ளியில் மாலை மணி 6.30க்கு இந்நிகழ்ச்சி நடைபெறும்.

பி.யாவினாகரன், தி. திவாஷினி, இ.அனிஷா, இ.கிஷாந்தினி, ர.ஹரிணி மேனன், ர.ஐஸ்வர்யா மேனன், கா.யமுனா தேவி, சா.சாஸ்வினி, இ.காயத்ரி, சி.தேபஸ்ரி, பி.ஷாமிரா மற்றும் கே.சந்திர கலா ஆகிய மாணவிகளே இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.

நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய இந்த இலவச நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும்படி சுற்று வட்டார கலை ஆர்வலர்களை நடன ஆசிரியர் ஸ்ரீமதி .வினேஸ்வரி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version