கிள்ளான், டிச.25-
இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவரின் வாழ்விலும் ஆக்கப்பூர்வ மாற்றத்தைக் கொண்டு வரும் நாளாக அமையட்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே சமயம், பிறக்கவிருக்கும் 2024ஆம் ஆண்டு அனைவருக்கும் அனைத்து வகையிலும் நன்மைகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை உறவுகள், நண்பர்களோடு சந்தோஷமாகக் கழிக்க வகை செய்வதோடு அனைவரும் நலமும், வளமும் பெற இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” என்று தனது தனது வாழ்த்துச் செய்தியில் அவர் விவரித்தார்.
