Site icon அநேகன்

தாமான் செந்தோசாவில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம்

கிள்ளான், டிச.26-

தாமான் செந்தோசாவிலுள்ள ஒரு தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் கிறிஸ்தபர், கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு திறந்த இல்ல உபசரிப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

   அதில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டார். இந்த வீடு ஒரு புனித தலமாக இருப்பது மட்டுமின்றி இன, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமூகநல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகவும் விளங்குகிறது என்று குணராஜ் புகழாரம் சூட்டினார்.

   இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அனைவருக்கும் தமது மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைக் தெரிவித்துக் கொண்டதோடு இதர மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் மிகவும் கவனமாய் இருப்பது மட்டுமின்றி கோவிட் தொற்றுப் பரவல் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version