Site icon அநேகன்

ரஹ்மா உதவி தொகை: முதற்கட்ட நிதி வெ.500ஆக அதிகரிப்பு! -பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன.26-

முதல் கட்ட ரஹ்மா உதவி தொகை (எஸ்.டி.ஆர்.) கடந்தாண்டு வழங்கப்பட்ட 300 வெள்ளியைக் காட்டிலும் இவ்வாண்டு 500 வெள்ளியாக அரசாங்கம் அதிகரித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.


வாழ்க்கைச் செலவின உயர்வை ஈடு செய்ய உதவும் வகையில் வரும் 29ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 9,000,000 பேருக்கு முதல் கட்ட எஸ்.டி.ஆர். வழங்கப்படும்.


“ஒவ்வொரு முறையும் மக்களை நான் சந்திக்கும் போது வருமானத்தைக் காட்டிலும் உயர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கைச் செலவினங்கள்தான் அவர்கள் முன்வைக்கும் விவகாரமாக இருக்கிறது” என்றார்.


“இந்த வலியை நான் ஒப்புக் கொள்கிறேன், இந்த அடிப்படை பிரச்சனைக்குத் தீர்வு கண்டு உதவிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும். மடானி அரசின் நிர்வாகத்தில் எந்த மக்களும் பின்னுக்குத் தள்ளப்பட மாட்டார்கள்” என்று ஓர் அறிக்கையில் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

-எப்.எம்.டி.

Exit mobile version