கோலாலம்பூர், ஜன.27-
பள்ளிக்கான தொடக்கக்கட்ட உதவி நிதி (பி.ஏ.பி.) 150 வெள்ளி ஒவ்வொரு மாணவருக்கும் எந்தவொரு கழிவுமின்றி முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியது.
இந்த 150 வெள்ளி, உதவித் தொகை ஒதுக்கீடு தொடர்பில் பெறப்பட்ட ஒருசில புகார்களின் அடிப்படையில் இந்நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் பி.ஏ.பி. அமலாக்கம் சம்பந்தப்பட்ட அனைத்து வழிகாட்டிகளையும் பள்ளி நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு மாணவருக்குமான 150 வெள்ளி மதிப்பிலான உதவி நிதியை அமல்படுத்தியதன் முக்கிய நோக்கம் ஆண்டு தொடக்கத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் பள்ளிச் செலவு சுமைகளைக் குறைப்பதற்கு ஆகும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.
-சினார் ஹாரியான்
