Site icon அநேகன்

கோரப்படாத பணம் தொடர்பான பயிற்சி பட்டறை! -லிம் ஹுய் இங்

ஜோர்ஜ்டவுன், ஜன.27-


தங்களின் கோரப்படாத பணத்தைப் பெறுவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நிதி அமைச்சு தேசிய கணக்காய்வாளர் துறை வாயிலாக பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருப்பதாக துணை அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார்.


இந்தப் பட்டறை நாடு முழுவதும் உள்ள ஒற்றுமை அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை உட்படுத்தியதாகும்.


கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 1,170 கோடி வெள்ளியாக இருந்த கோரப்படாத மொத்தத் தொகை அதற்கு 6 மாதத்திற்கு முன்பு 1,130 கோடியாக பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


இவையனத்தும் வங்கி சேமிப்பு, காப்புறுதி, முன்பணம் போன்றவற்றில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டதாகும் என்று சீனப் புத்தாண்டை முன்னிட்டு சௌராஸ்தா சந்தையில் ஆரஞ்சுப் பழங்கள் வழங்கும் நிகழ்வில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் இங் பேசினார்.

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version