Site icon அநேகன்

ரஹ்மா ரொக்க உதவி: திங்கள்கிழமை முதல் வழங்கப்படும்! -நிதி அமைச்சு

கோலாலம்பூர், ஜன.27-

   ரஹ்மா உதவி தொகைத் (எஸ்.டி.ஆர்.) தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட 8.2 மில்லியன் பேருக்கு வரும் திங்கள்கிழமை தொடங்கி கட்டம் கட்டமாக ரொக்க உதவி தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.  

   இத்தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு அல்லது பேங்க் சிம்பானான் வங்கிக் கணக்கில் அவர்களின் தகுதிக்கேற்ற பிரிவின்படி கட்டம் கட்டமாகச் செலுத்தப்படும்.

   இந்த முதல் கட்ட எஸ்.டி.ஆர். பொதுமக்களில் பெரும்பாலானோரின் செலவு சுமைகளைக் குறைக்கும் பொருட்டு குடும்ப ஒன்றுக்குக் கடந்தாண்டு வழங்கப்பட்ட 300 வெள்ளியைக் காட்டிலும் இவ்வாண்டு 500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

   இதில் 2,500 வெள்ளி மற்றும் அதற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு 500 வெள்ளி வழங்கப்படும் வேளையில், 2,501லிருந்து 5,000 வரை வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு 100 முதல் 300 வெள்ளி வரை மற்றும் வாழ்க்கைத் துணையற்ற முதியோருக்கு 150 வெள்ளி, திருமணமாகாதவர்களுக்கு 100 வெள்ளி வழங்கப்படும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.  

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version