கோலாலம்பூர், ஜன.28-
இன்று தலைநகரில் நடைபெறும் குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளும் தமிழக பேராளர்களுக்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நிர்வாகச் செயலாளர் டத்தோ பி.சகாதேவன் தலைமையில் விருந்துடன் கூடிய வரவேற்பு நல்கப்பட்டது.
டெலி ஸ்டார் நிறுவனத்தின் எஸ்.பி.மணிவாசகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டத்தோ சகாதேவன் வர்த்தகக் கருத்தரங்கில் பங்கேற்கும் செழியன் குமாரசாமி, வழக்கறிஞர் மாணிக்கவாசகம் மற்றும் அருள்செல்வம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.
நேற்று நடைபெற்ற இந்த உபசரிப்பு நிகழ்ச்சியில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன், ம.இ.கா. கோத்தா ராஜா தொகுதித் தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி, இலக்கியம் மற்றும் கலை கலாச்சார அறவாரியத்தின் நிர்வாகச் செயலாளர் கரு.பன்னீர் செல்வம் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் டத்தோ சகாதேவனை வழக்கறிஞர் மாணிக்கவாசகம் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
