Site icon அநேகன்

ஐ.நா.வின் நிதியைக் குறைப்பது அகதிகளுக்கு செய்யும் மோசடி! -சார்ல்ஸ் சந்தியாகோ சாடல்

கோலாலம்பூர், ஜன.29-

அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி.ஜே.) தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாமல் போவது குறித்து முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ அச்சம் தெரிவித்தார்.

“இது தொழில்நுட்ப ரீதியில் கட்டுப்படுத்தி வைத்திருந்த போதிலும் இத்தீர்ப்பை அமல்படுத்தி விட முடியாது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து நல்ல ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இதில் என்னைப் பொறுத்தவரை அனைத்துலக மனிதச் சட்டத்திற்கு எந்த நாடும் மதிப்பளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹாமாசில் நடந்த தாக்குதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகியவற்றுக்குத் தொடர்பு இருப்பதால் ஐ.நா.வின் நிதி மற்றும் பணி இயக்க அமைப்புக்கான (யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ.) நிதி திரும்ப மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ. நிதியைத் திரும்ப மீட்டுக் கொள்வது என்பது பல்லாயிரக்கணக்கானோரைக் கொலை செய்வதற்கு ஈடாகும் என்று இந்நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். இனப்படுகொலை மாநாடு 3(இ) விதியின் கீழ் இவர்கள் தண்டிக்கப்படலாம். இவர்கள் வேண்டுமென்றே ஓர் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

உதவி நிதியைத் திரும்ப மீட்டுக் கொள்வது காஸாவுக்கு மனிதநேய உதவிகளை அனுப்பும்படி உத்தரவிட்ட ஐ.சி.ஜே.வின் தீர்ப்புக்கு எதிர்மாறானதாகும்.

இந்நாடுகளின் செயலால் பட்டினி கிடந்து பாலஸ்தீனத்தில் இன்னும் ஏராளமானோர் மரணமடைவர். இது மீண்டும் பல்லாயிரக்கணக்கானோரை மரணத்திற்கு இட்டுச் செல்லும்.

யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ. நிதியைக் குறைக்கும் முடிவுக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் அரசுகளும் நிச்சயமாகக் கண்டனம் தெரிவித்திருப்பது மட்டுமின்றி ஐ.சி.ஜே.வின் தீர்ப்பை இஸ்ரேல் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்தி இருக்கும்.


இப்போது நடவடிக்கை மேற்கொள்ளத் தவறினால் காஸாவில் உயிரிழப்புகள் தொடர்வது நிச்சயம் என்றார் சார்ல்ஸ்.

Exit mobile version