Site icon அநேகன்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் ஆட்சி காலம் நிறைவு!

கோலாலம்பூர், ஜன.30-

ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு இருப்பதைப் போல் ஒவ்வொரு சந்திப்பிற்கும் நிச்சயமாக ஒரு பிரிவு இருக்கும். நாட்டின் முதன்மைத் தலைவராக அரியணையில் அமர்ந்திருந்த 16ஆவது மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரி ஆயாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் தவணை காலம் ஒரு நிறைவை நாடியது.

மாமன்னரின் ஆட்சி காலம் நிறைவுற்றதைத் தொடர்ந்து இன்று காலை 8.00 மணி தொடங்கி இஸ்தானா நெகாராவில் பிரிவைத் தாங்க முடியாமல் மக்கள் கண்ணீருடன் மாமன்னரை வழியனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வை ஆர்.டி.எம். நேரடி ஒளிபரப்பில் கண்டு களித்தவர்கள் மட்டுமின்றி சமூக வலைத் தளங்களில் இருந்தவர்களும் மாமன்னர் தம்பதியருக்குப் பிரியாவிடை செலுத்தினர்.

முன்னதாக 64 வயதுடைய அல்-சுல்தான் அப்துல்லா மாட்சிமை தங்கிய 16ஆவது மாமன்னராகக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அரியணையில் அமர்ந்தார்.

-பெரித்தா ஹாரியான்

Exit mobile version