Site icon அநேகன்

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்களாக இந்தியர்கள் நால்வர் உள்பட 15 பேர் பதவி உறுதி மொழி!

கிள்ளான், பிப் 2-

இன்று நடைபெற்ற கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு சடங்கில் இந்தியர்கள் நால்வர் உள்பட 15 பேர் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

டத்தோ பண்டார் டத்தின் நோராய்னி ரோஸ்லான் முன்னிலையில் இந்த நிகழ்வு இங்குள்ள கிள்ளான் மாநகர் மன்ற தலைமையகத்தின் மாடி ராஜா மஹாடி கூட்ட அறையில் நடைபெற்றது.

2024/2025ஆம் தவணைக்கான புதிய மாநகர் மன்ற உறுப்பினர்கள் பட்டியலில் மொத்தம் 24 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் நால்வர் இந்தியர்கள்.

யுகராஜா பழனிசாமி (ஜசெக), குமணன் பெருமாள் (ஜசெக), தங்கராஜன் த/பெ அப்துல் காசிம் (பி.கே.ஆர்.) ரோய் ஞானேஸ்வரன் (பி.கே.ஆர்.) ஆகியோரே அந்நால்வர்.

24 உறுப்பினர்களைக் கொண்ட கிள்ளான் மாநகர் மன்றத்தில் தற்போது 15 பேர் மட்டுமே இன்று நியமனம் பெற்றனர். அவர்களில் நால்வர் பி.கே.ஆர். கட்சியையும் எண்மர் ஜசெக வையும் இருவர் அமானா கட்சியையும் சேர்ந்தவர்கள்.

இதர உறுப்பினர்கள் படிப்படியாக இப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவர் என்று அறியப்படுகிறது.

Exit mobile version