Site icon அநேகன்

மிம்கோய்ன் விருது விழா: டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கோலாலம்பூர், பிப்.4-

தலைநகரில் நடைபெற்ற மிம்கோய்ன் விருது விழாவில் இஸ்லாமிய கல்வி வாரியத் தலைவரும் கோலாலம்பூர் பொருளாதார வர்த்தக மன்றத் தலைவரும் நம்பிக்கை குழுமத்தின் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் முஹம்மத் இக்பால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

இவருக்கு மனித வள துறை துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.

மிம்கோய்னின் 4ஆவது சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கான வர்த்தக விருது விழா தலைநகர் மாட்ரேட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 31 பேர் இவ்விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களில் நம்பிக்கை குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான டத்தோஶ்ரீ முகம்மது இக்பால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வர்த்தகம், ஊடகம், அறப்பணி என பல துறைகளில் ஈடுபட்டு வரும் டத்தோஶ்ரீ இக்பாலின் சேவையை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

யூசோப் தைய்யூப் நிறுவன தோற்றுநர் டத்தோஶ்ரீ யூசுப் தையோப், பெர்கேசோ தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ முஹம்மத் அஸ்மான், நஸ்மிர் ஹோல்டிங்ஸ் இயக்குநர் டத்தோ காதர் ஷா, ராம்சல் மீடியோ நிறுவன இயக்குநர் டாக்டர் ராஜா லைலா ராணி ஆகியோரும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர்த்து டத்தோ முஹம்மத் ரிஷா, பேராசிரியர் டாக்டர் நிஷாம் ஷா, முகிலன் ராதாகிருஷ்ணன், டத்தோ முஹம்மத் அலி ஜின்னா, டத்தோ ஏபி சிவம், டத்தோ வீரா நைனா முஹம்மத், டத்தோ முஹம்மத் நஸ்ரி, ஹாஜி அப்துல் மாலிக் பாக்கர், ஷேக் ஜமால் அஹ்மத், முஹம்மத் சுபஹான், டத்தோ தமிழ்செல்வம், டத்தோ அப்துல் காதர், முஹம்மத் இஸ்மாயில், ஹைதர் அலி, ஷஃபிக் ரஹ்மான், ஹிதாயா மாஜு அலி ஷாஜஹான், ஜாபர் ஸாடிக், ரியாஸ்கான் அஹ்மத் லத்திப், முஹம்மத் ஹசான், மாரிமுத்து, கோ ஹுன் லுன், சின் யோக் லோங், ராஜமுருகன் நாதன், வெங்கட்டராமன் ஆகியோரும் இவ்விழாவில் விருதுகள் பெற்றனர்.

இவர்களுக்கு துணையமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான், மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஜமாருல்கான், துணைத் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் ஆகியோர் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

Exit mobile version