கோலாலம்பூர், பிப்.5-
மலேசிய புள்ளி விவர துறை 2023ஆம் ஆண்டுக்கான மலேசிய சுகாதார புள்ளி விவர அறிக்கையின் அடிப்படையில் மரணச் சம்பவங்களுக்கான 4ஆவது மிகப் பெரிய காரணமாக புற்றுநோய் இருப்பதைக் காட்டுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 10.5 விழுக்காடாக பதிவு செய்யப்பட்ட மரணச் சம்பவங்களின் விகிதம் 2022இல் 12.6ஆகப் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
கடந்தாண்டுக்கான மலேசிய சுகாதார புள்ளி விவர அறிக்கையின்படி தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் மரணச் சம்பவங்கள் 26.44 விழுக்காடாக முதன்மைச் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்ட வேளையில், சுகாதார அமைச்சு மருத்துவமனைகளில் 9.29 விழுக்காட்டில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 4ஆவது மிகப் பெரிய நோயாக புற்றுநோய் திகழ்கிறது.
மலேசிய புற்றுநோய் பதிவேடு வெளியிட்ட அறிக்கையின்படி இவ்வாறான மரணச் சம்பவங்கள் உயர்வுக்கு புற்றுநோயை 3 அல்லது 4ஆவது கட்டத்தில் கண்டுபிடிக்கப்படுவதுதான் ஒட்டுமொத்தமாக 60 விழுக்காட்டிற்கும் மேல் பதிவுச் செய்யப்பட்டதற்குக் காரணம் என்று ஓர் அறிக்கையில் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கிப்ளி குறிப்பிட்டார்.
-பெர்னாமா
