Site icon அநேகன்

சிறந்த சிறு & நடுத்தர வர்த்தகர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்! -டத்தோ ஜமாருல்கான்

கோலாலம்பூர், பிப்.5-

வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (மிம்கோய்ன்) தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல்கான் தெரிவித்தார்.

இதனை நோக்கமாகக் கொண்டே மிம்கோய்ன் இவர்களுக்காக 4ஆவது ஆண்டாக விருது விழாவை நடத்துகிறது என்று அவர் சொன்னார்.

இம்முறை சுமார் 31 சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.இந்திய முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற இனத்தவர்களும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுவர் என்று இவ்விழாவில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

வர்த்தகத்தில் சாதிக்கும் சிறு நடுத்தர வணிகர்களை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும் என்று விருது விழாவில் பேசிய அவர் கூறினார்.

“இந்திய முஸ்லிம் சமூகத்தினர் தற்போது 70க்கும் மேற்பட்ட துறைகளில் சாதித்து வருகின்றனர். இவர்களை மேலும் ஊக்குவிக்க இதுபோன்ற விருது விழா முக்கியம் ” ..

“அதே வேளையில், இவர்கள் தத்தம் துறையில் தொடர்ந்து மேம்பாடு காண்பதற்கான நடவடிக்கைகளை மிம்கோய்ன் முன்னெடுக்கும்” என்றார் டத்தோ ஜமாருல்கான்.

Exit mobile version