சுபாங் பிப் 25-
எண், எழுத்து, வாசிப்பு என மாணவர்களின் அடிப்படை கல்வி மிக முக்கியம். அவ்வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் மீது மைபிபிபி கூடுதல் கவனம் செலுத்தும் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி தெரிவித்தார்.
சிறந்த மாணவர்களைக் காட்டிலும் பின்தங்கிய மாணவர்கள் மீதே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்
மைபிபிபி கட்சியை அழிவதை அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் என்று டத்தோ மோகன் நினைவு கூர்ந்தார்.
சுயநலம் கொண்டவர்களால் மைபிபிபி பல பிரச்சனைகளை எதிர்நோக்கியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதன் நடவடிக்கைகள் செயல் இழந்தன.
நெருக்கடியான காலகட்டத்தில் மைபிபிபி கட்சியை காப்பாற்றிய பெருமை டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் அவர்களையே சாரும்.
இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவரின் சேவையை மறக்க முடியாது என்று மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ மோகன் குறிப்பிட்டார்.
இதனிடையே சிலாங்கூர் மாநில மைபிபிபி தொகுதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு ஏராளமான உதவிகளை வழங்கி வருவதை மோகன் சுட்டிக் காட்டினார்.
இந்த உதவிகள் மைபிபிபி உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் தொகுதி தலைவர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்றார்.
சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், மைபிபிபி இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட பலரும் இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
