Site icon அநேகன்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: சமூக இயக்கங்களைச் சேர்ந்த 550 பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், பிப்.27-

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தலைநகர், செபூத்தேவில் உள்ள சீனக் கோவிலின் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சிலாங்கூரின் 20 சமூக இயக்கங்களைச் சேர்ந்த 550 பேர் பங்கேற்றனர்.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வின் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் ஒரு புதிய சூழலில் ஒன்றிணையும் அனுபவத்தைப் பெற்றனர். நல்ல மனம் படைத்தவர்கள் மற்றவர்களின் மீது பரிவு காட்டுவதற்கான ஒரு தளமாகவும் இது திகழ்ந்தது.

இந்நிலையில், சுவைமிக்க உணவு விருந்துடன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து மாற்றுத் திறனாளிகள் 30 பேரை மகிழ்வித்ததற்காக மலேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னிலை பயிற்சி மையத்தின் (ஐ.எல்.டி.சி.) தலைவர் ஜி.சிவா தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version